நடப்பு ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் இந்தியாவின் தங்க தேவை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்க நுகர்வு இந்த காலத்தில் 268 டன்னாக உள்ளது. தங்கத்தின் விலை குறைந்ததே நுகர்வு அதிகரிப்புக்குக் காரணம் என்று உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்தியாவின் தங்க நுகர்வு 238 டன்னாக இருந்தது.
ரூபாய் மதிப்பில் தங்கத்தின் தேவை 5.8 சதவீதம் அதிகரித்து ரூ. 62,939 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மதிப்பு ரூ. 59,480 கோடியாகும்.
இந்த காலாண்டின் தொடக் கத்தில் தங்கத்தின் விலை குறைவாக இருந்ததால் பண்டிகை மற்றும் திருமணத்துக்கு தங்க ஆபரணங்கள் வாங்குவது அதிகரித்திருந்ததாக டபிள்யூஜிசி அறிக்கை தெரிவிக்கிறது.
ஆபரணங்களுக்கான தேவை இந்த காலாண்டில் அதிகமாக இருந்தது. இது 15 சதவீதம் அதிகரித்ததில் 211 டன்னை தொட்டது. முந்தைய ஆண்டில் இது 184 டன்னாக இருந்தது.
ரூபாய் மதிப்பில் 7.7 சதவீதம் அதிகரித்து ரூ. 49,558 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 45,996 கோடியாக இருந்தது.
இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு இதே காலாண்டில் ஆபரண நகை நுகர்வு 213 டன்னாக இருந்தது. அதற்குப் பிறகு அதிகபட்ச நுகர்வு தற்போது இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்க இறக்குமதி இந்த காலாண்டில் 24 சதவீதம் அதிகரித் துள்ளது. மொத்தம் 300 டன் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் இறக்குமதியான தங்கம் 242 டன் மட்டுமே.
4-ம் காலாண்டிலும் இதே நிலை நீடிக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. தந்த்ரியாஸ் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களால் தங்க நுகர்வு அதிகரிக்கும் என்றும், நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசளிப்பதும் இந்த காலகட் டத்தில்தான் அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில்
சர்வதேச அளவில் தங்க தேவை இந்த காலாண்டில் 7.5 சதவீதம் அதிகரித்து மொத்த நுகர்வு 1,121 டன்னாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தங்க நுகர்வு 1,041 டன்னாக இருந்தது.
தங்க ஆபரணங்கள், நாண யங்கள், தங்க பிஸ்கெட்கள் ஆகியன வாங்குவது 13 சதவீதம் அதிகரித்து 927 டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 816 டன்னாக இருந்தது.
முதலீட்டுக்காக தங்கம் வாங் குவது 27 சதவீதம் அதிகரித் துள்ளது. மொத்தம் 230 டன் முதலீட்டுக்காக வாங்கப்பட் டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 181 டன்னாக இருந்தது. முதலீட்டுக்காக தங்கம் வாங்கியதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 207 சதவீதம் அதிகரித்ததில் 33 டன் முதலீட்டுக்காக வாங்கப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 11 டன்னாக இருந்தது. சீனா இரண்டாமிடத்தில் உள்ளது. மொத்தம் 52 டன் வாங்கப்பட்டுள்ளது. மூன்றாமிடத் தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் மொத்தம் 61 டன் தங்கத்தில் முதலீடு செய்துள்ளன.
ஆபரணங்களுக்காக தங்கம் வாங்கும் போக்கு சர்வதேச அளவில் ஆண்டுக்காண்டு 6 சதவீதம் அதிகரித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
சுரங்கம் மூலமான தங்க உற்பத்தி 3 சதவீதம் அதிகரித்து 848 டன்னாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் உற்பத்தி 814 டன்னாக இருந்தது.
மறு சுழற்சி தங்கத்தின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த காலாண்டில் 6 சதவீதம் குறைந்து 252 டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 268 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் தங்க நுகர்வில் இந்தியாவும், சீனாவும் முன்னிலை வகிக்கின்றன. மொத்த தேவையில் 45 சதவீதம் இவ்விரு நாடுகளிலும் நுகரப்படுகின்றன.