இந்தியா கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை, 58.37 பில்லியன் அமெரிக்க டாலரை அன்னிய நேரடி முதலீடாக பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அன்னிய நேரடி முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவான கொள்கையை அமல்படுத்துவது மத்திய அரசின் முயற்சியாக இருந்து வருகிறது. அன்னிய நேரடி முதலீட்டுக்கு தடையாக இருந்த விஷயங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளன. அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
* இந்தியா கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 58.37 பில்லியன் அமெரிக்க டாலரை அன்னிய நேரடி முதலீடாக பெற்றுள்ளது. ஒரு நிதியாண்டின் முதல் 8 மாதத்தில் கிடைத்த மிக அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடு இதுவாகும். கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதத்தில் பெற்ற 47.67 பில்லியன் அமெரிக்க டாலரை விட, இது 22 சதவீதம் அதிகம்.