தேசிய தலைநகர் மண்டலத்தில் மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு, சுமார் ரூ.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதியில், கட்டுமானம் நடைபெறும் இடங்கள், கட்டிடங்களை இடிக்கும் இடங்களில் இருந்து காற்று மாசு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு ஆய்வு குழுக்களை அமைக்கும்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்துக்கான காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அமைக்கப்பட்ட 174 குழுக்கள் கடந்த 31.12.2020-லிருந்து 15.1.2021 வரை 1600 இடங்களில் சோதனைகள் நடத்தின. இதில் 119 இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கு சுமார் சுமார் ரூ.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 27 இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன.