வணிகம்

ஸ்டார்ட் அப் ஆலோசனை குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

தேசிய தொடக்க நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) ஆலோசனை குழுவுக்கு அரசு அதிகாரிகள் அல்லாத 28 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமான தொடக்க நிறுவனங்களை உருவாக்கிய நிறுவனர்கள், புதிய தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய நபர்கள், தொடக்க நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள், தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பை சேர்ந்த 28 பேர் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இதில் எது முன்போ அது வரை இருக்கும்.

நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஏற்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கவும், இந்த தேசிய தொடக்க நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவை, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை 2020ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி அமைத்தது.

SCROLL FOR NEXT