கட்டுமான வேலைகள் நடந்து வரும் சுமார் 5,100 கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் மிகவும் சிக்கலானவை (ரிஸ்க்) என கிரிஸில் தர நிறுவ னத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த திட்டங் களின் மதிப்பு ரூ. 67,200 கோடி யாகும்.
இதில் தனியார் உதவியோடு ( BOT) மேற்கொள்ளப்படும் சுமார் ரூ. 25,800 கோடி மதிப்பிலான 2,400 கிலோ மீட்டர்களுக்கான நெடுஞ்சாலை திட்டங்கள் அதிக ரிஸ்க் கொண்டவை என்றும் குறிப்பாக நிதி நிலைமை மற்றும் ஸ்பான்சர்கள், சேவைகள் காரணமாக அதிக ரிஸ்க் கொண்ட வையாக உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கட்டுமான வேலைகள் நடந்து வரும் சுமார் 5,100 கிலோ மீட்டர்கள் மற்றும் செயல் பாட்டில் உள்ள 2,400 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 7,500 கிலோ மீட்டர் களுக்கான திட்டங்கள் 2010 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்குதல், செயல் படுத்துதல், மாற்றிக் கொடுப்பது அடிப்படையில் தொடங்கப் பட்டவை. இவை இன்று அதிக ரிஸ்க் கொண்டதாக உள்ளது.
தோராயமாக 50 சதவீத நெடுஞ்சாலை திட்டங்கள் கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. செலவுகள் அதிகரிப்பு மற்றும் ஸ்பான்சர்களிடமிருந்து நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டங்கள் முடிவடையுமா என்பது தெரியாமல் உள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
விதிமுறைகளை தளர்த்துவது (ரைட் ஆப் வே) மற்றும் இதர அனுமதிகளை கொடுத்து இந்த திட்டங்களின் பயன்களுக்கான அரசாங்கம் முனைப்பு காட்டும் என நம்புவதாகவும், மத்திய அரசு 80 சதவீதம் ரைட் ஆப் வே செய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறியுள்ளது. ஏனென்றால் இந்த திட்டங்கள் அதிக கட்டமைப்பைக் கொண்டவை என்றும் அறிக்கை கூறியுள்ளது.
கட்டுமான வேலைகள் நடை பெற்றுவரும் திட்டங்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதலீடு மற்றும் மொத்த நிதித் தேவைகள் தோராயமாக 28,500 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
உள் கையகப்படுத்துவது காரணமாக சுமார் 16,000 கோடி தேங்கியுள்ளது. குறிப்பாக ஸ்பான்சர்ஷிப், பங்கு விற்பனை மற்றும் இதற்கான சிறப்பு வாகனங்கள் காரணமாக தேங்கியுள்ளது. குறிப்பாக இதில் 12,500 கோடி பற்றாக்குறையாக உள்ளது. இந்த அறிக்கைக்காக செயல் பாட்டில் உள்ள 80 திட்டங் களில் 26 திட்டங்களை ஆய்வு செய்துள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் சுங்க சாவடியை அடிப்படையாகக் கொண்டவை.