வணிகம்

அடுத்த பிப்ரவரியில் வட்டி குறைப்பு: பேங்க் ஆப் அமெரிக்கா கணிப்பு

பிடிஐ

வரும் டிசம்பரில் நடக்க இருக்கும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் வட்டி குறைப்பு ஏதும் இருக்காது. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 0.25 சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும், அதுவே இறுதியான வட்டி குறைப்பாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லிஞ்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இலக்குபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்கும். அதனால் பிப்ரவரியில் வெளியாகும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் 0.25 சதவீத வட்டி குறைப்பு செய்யப்படும் என்று வங்கி கணித்திருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. வரும் ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 6 சதவீதமாக குறைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. அதற்கு கீழாக 5.8 சதவீதமாக பணவீக்கம் இருக்கும்.

அதே சமயத்தில் வளர்ச்சி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பருவமழை குறைவு, சர்வதேச அளவில் மந்தமான வளர்ச்சி விகிதம் ஆகியவை காரணமாக இந்தியாவிலும் வளர்ச்சி குறையும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக் கிறது.

2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணவீக்கம் 5 சதவீதத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த இலக்கின் மீது அனைவரது கவனமும் இருக்கிறது.

SCROLL FOR NEXT