வெர்டுயுஸா நிறுவனத்தின் 100 சதவீத பங்கு வட்டியை ஆஸ்டின் ஹோல்ட் நிறுவனம், ஜிஐசி முதலீட்டாளர், சிபிபிஐபி முதலீட்டாளர் ஆகியவை இணைந்து பெறுவது, அந்த நிறுவனத்தை இணைந்து இயக்குவது குறித்த திட்ட முன்மொழிவுக்கு இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி வெர்டுஸா நிறுவனத்தின் (வெர்டுஸா) 100 சதவீத பங்கு வட்டியை ஆசிய பேரிங் தனியார் வர்த்தக பங்கு (பிபிஇஏ) (ஆஸ்டின் ஹோல்ட் நிறுவனத்தின் மூலம்), அடாகோ முதலீட்டு தனியார் நிறுவனம் (ஜிஐசி முதலீட்டாளர்), சிபிபி முதலீட்டு வாரியம் தனியார் நிறுவனம் (சிபிபிஐபி முதலீட்டாளர்) ஆகியவை இணைந்து பெறுவது, அந்த நிறுவனத்தை இணைந்து இயக்குவது ஆகியவை தொடர்பாக திட்ட முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிடும்.