ஐபிஎம் நிறுவனத்துடன் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் புளூமிக்ஸ் கிளவுட் கம்ப்யூடிங் தளத்தில் இன்ஃபோசிஸ் இணைந்து செயல்படும்.
இதன் மூலம் அடுத்த தலைமுறை செயலிகளை (ஆப்ஸ்) ஐபிஎம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இன்ஃபோசிஸ் தனது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கித் தரும் என தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இன்ஃபோசிஸ் நிறுவனம் புளூமிக்ஸ் அடிப்படையிலான பிரத்யேக ஆய்வகத்தை உருவாக்கி அதில் புதிய செயலிகளை ஏற்படுத்தும்.
புளூமிக்ஸ் கிளவுட் கம்ப்யூடிங் குறித்த பாடத் திட்டம் தனது நிறுவன பயிற்சித் திட்டத்தில் சேர்க்க உள்ளதாக நிறுவனத்தின் அப்ளிகேஷன் மேம்பாடு மற்றும் நிர்வாகப் பிரிவின் தலைவர் ஸ்ரீகாந்தன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.