அசோக் லேலண்ட் நிறுவனம் பிரான்ஸைச் சேர்ந்த நெக்ஸ்டர் சிஸ்டம் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இம்மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்திய ராணுவத்துக்குத் தேவையான பீரங்கிகளை வடிவமைக்க உள்ளன.
எம்ஜிஎஸ் எனப்படும் புதிய ரக பீரங்கிகளை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்து அவற்றை உருவாக்க உள்ளதாக லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி எல் அண்ட் டி நிறுவனம் பிரதான ஒப்பந்ததாரராகும். எம்ஜிஎஸ் பீரங்கிகளுக்கு இறுதி வடிவ இணைப்பை நெக்ஸ்டர் அளிக்கும். சீசர் பீரங்கி தொகுப்பானது அசோக் லேலண்ட் நிறுவனம் உருவாக்கியதாகும். இதன் மேம்பட்ட பீரங்கியாக எம்ஜிஎஸ் இருக்கும். இதை மூன்று நிறுவனங்களும் இணைந்து உருவாக்கும்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அசோக் லேலண்ட் டிபன்ஸ் சிஸ்டம் லிமிடெட் இத்தகைய பாதுகாப்பு தளவாடங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.