வணிகம்

இவரைத் தெரியுமா?- தீபக் பரேக்

செய்திப்பிரிவு

ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் தலைவர். 1978 ல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். 1985ல் வாழ்நாள் இயக்குநர் பொறுப்புக்கு வந்தார். 1993ல் தலைவராக பொறுப்பேற்றார்.

அரசாங்கத்தின் நிதித்துறை சேவைகள், முதலீட்டு சந்தை, உள்கட்டமைப்பு, மறு சீரமைப்பு சார்ந்த பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர் மற்றும் ஆலோசகராகவும் உள்ளார்.

அரசின் முதலீட்டு கமிட்டி உறுப்பினர். அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசின் ஆலோசகர். மத்திய அரசின் மியூச்சுவல் பண்ட் நிறுவனமான யுடிஐ நிறுவனத்தை மறு சீரமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.

கேஸ்ட்ரால் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சீமென்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இந்தியன் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் ஆலோசனைக்குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கி இவரை நியமித்துள்ளது.

தொழில் துறை சார்ந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட்டில் மிகச் சிறந்த சாதனையாளர் விருதைப் பெற்றவர்.

SCROLL FOR NEXT