வணிகம்

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல்: இந்திய உணவுக் கழகம் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

மத்திய இருப்பிலிருந்து பரவலாக்கப்பட்ட கொள்முதல் மற்றும் பரவலாக்கப்படாத கொள்முதலை மேற்கொள்ளும் மாநிலங்களின் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக இந்திய அரசு, சட்டீஸ்கர் மாநில அரசு மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியவை ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

2020-21 காரிப் பருவ காலத்திற்கான சந்தைப்படுத்துதலின்போது ராஜீவ்காந்தி கிசான் நியாய் திட்டம் குறித்து சத்தீஸ்கர் மாநில அரசு டிசம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட விளம்பரம்/ செய்திக்குறிப்பில் அந்த மாநிலம் 2020-21 காரிப் பருவ காலத்திற்கான சந்தைப்படுத்துதலில் விவசாயிகளிடமிருந்து ஒரு குவின்டால் நெல்லை ரூ.2500-க்கு கொள்முதல் செய்து ஒரு ஏக்கருக்கு ரூ. 10,000 குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட கூடுதலாக மறைமுக ஊக்கத்தொகையாக வழங்கும் என்று‌ தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மத்திய இருப்பிலிருந்து 24 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை இந்திய உணவுக் கழகத்தில் நடப்பு கரீப் பருவ காலத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட அளவுக்கு இணையாக இருக்கும்.

SCROLL FOR NEXT