சீனாவைச் சேர்ந்த ஐசிடி சொல்யூ ஷன் நிறுவனமான ஹுவாய் நிறுவனத்துடன் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் கூட்டு சேர்ந்துள்ளது.
மிகப் பெரிய விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங் களில் வை-ஃபை இணைப்பு வழங்குவதில் இரு நிறுவனங் களும் கூட்டாக செயல்படும். இந்த முயற்சிக்கு இரு நிறுவனங்களும் எவ்வளவு தொகையை செலவிடப் போகின்றன என்ற விவரம் வெளியாகவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்படி ஹுவாய் நிறுவனம் டபிள்யூஎல்ஏஎன் இணைப்பு கட்டமைப்பு வசதி களை அளிக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனம் பலதரப்பட்ட வாடிக்கை யாளர்கள், உபயோகிப்பாளர்கள், கிளவுட் அடிப்படையிலான சேவை நிர்வகிப்பாளர்கள் ஆகியோரை அளிக்கும்.
இரு நிறுவனங்களும் கூட்டாக அளிக்கும் சேவையின் மூலம் அரங் குகள், ஷாப்பிங் மால்களின் வரு வாய் அதிகரிக்கும் என்று அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மைதானங் களில் வைஃபை சேவை அளிப்பதில் ஹுவாய் நிறுவனம் முன்னணியில் உள்ளது. விளை யாட்டு மைதானங்களில் உள்ள மக்களை வைஃபை மூலம் இணைப்பது மிகவும் சிக்கலான பணியாகும். அத்தகைய பணிகளை இன்ஃபோசிஸ் தொழில்நுட்பம் மூலம் அளிக்கும்.
அமெரிக்க நிறுவனத்தை வாங்கியது இன்ஃபோசிஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த நோவா ஆலோசனை நிறுவனத்தை 7 கோடி டாலருக்கு (ரூ. 454 கோடி) கையகப்படுத்தியுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மேம்பட்ட ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாக நோவா திகழ்கிறது. இந்நிறுவனம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்ற பிறகு இந்நிறுவனம் கையகப்படுத்தும் மூன்றாவது நிறுவனம் இதுவாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவில் செயல்படும் கல்லிடஸ் நிறுவனத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ. 763 கோடிக்கு கையகப்படுத்தியது. பிப்ரவரி மாதத்தில் பனாயா எனும் ஆட்டோமொபைல் நிறுவனத்தை ரூ. 1,244 கோடிக்கு வாங்கியது.