ஏற்றுமதிப் பொருள்களுக்கான வரிச் சலுகைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது
2020 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் தொடர்ச்சியாக, 2021 ஜனவரி 1-இல் இருந்து ஏற்றுமதிப் பொருள்களுக்கான வரிச் சலுகைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பலன் பெறத் தகுதியுள்ள ஏற்றுமதிச் சரக்குகளின் விவரங்கள், பொருந்தக்கூடிய வரிச்சலுகை விகிதம், விலக்களிக்கப்பட்டுள்ள பிரிவுகள், இதர நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் வழிபாட்டுச் செயல்முறைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இதற்கிடையே, கரூவூல பில்கள் ஏலம் தொடர்பான கால அட்டவணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 2021 இறுதியில் முடிவடையும் காலாண்டிற்கான, மத்திய அரசின் கரூவுல பில்கள் தொடர்பான கால அட்டவணையை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன், அரசு வெளியிட்டுள்ளது.