வணிகம்

பிஎம்டபிள்யூ கிராண்ட் கூபே இந்தியாவில் அறிமுகம்

செய்திப்பிரிவு

சொகுசு கார் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எம்6 கிராண்ட் கூபே ரக கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பை யில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் காரின் விலை ரூ. 1.71 கோடி யாகும்.

இதில் புதிய எல்இடி முகப்பு விளக்குகள், மேம்படுத்தப்பட்ட பின்புற விளக்குகள், சிறிது மாற்றி யமைக்கப்பட்ட கிரில் ஆகியன சிறப்பம்சமாகும்.

4.4 லிட்டர் இன்ஜின் கொண்ட இந்த கார் 560 பிஎஸ் மற்றும் 680 என்எம் திறன் கொண்டது. இதில் வி8 மோட்டார் உள்ளது. இதனால் 4.2 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும். இதில் 7 கியர்கள் உள்ளன. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இதில் ஸ்டார்ட்-ஸ்டாப் என்ற தொழில் நுட்பம் உள்ளதால் எரிபொருள் சிக்கனமானது. ஒரு லிட்டருக்கு 10.10 கி.மீ தூரம் சோதனை ஓட்டத்தில் ஓடியதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT