ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் இரண்டு டாடா ஸ்டீல் ஆலைகளில் இருந்து 1,200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கப்போவதாக செய்தி வெளிவந்துள்ளது.
``இங்கிலாந்தில் உருக்கு ஆலைகள் ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை இந்த பணி நீக்க நடவடிக்கை நிரூபிக்கிறது. இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தொழிற்சங்க பொதுச் செயலாளர் ராய் ரிக்கெஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முழு விவரங்களை பெற டாடா ஸ்டீல் ஆலையுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
``பல மாதங்களாக இங்கிலாந் தில் நிறைய சவால்களை சந்தித்து வருகிறோம். தற்போது எங்களது பலத்தை அதிகரிக்க பல கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களை செய்ய இருக்கிறோம்” என்று டாடா ஸ்டீல் ஆலையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.