அஞ்சலக ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள் 07.01.2021 அன்று பகல் 11.00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ் நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் அதனை முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது bgt.tn@indiapost.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ 04.01.2020 பிற்பகல் 3 மணி்க்குள் அனுப்ப வேண்டும்.
கடிதத்தோடு இமெயில் முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு காணொலி காட்சிக்கான இணைப்பு அனுப்பி வைக்கப்பெறும்.