வணிகம்

தேர்தல் பத்திரத் திட்டம்: எஸ்பிஐ வங்கி கிளைகளில் விநியோகம்

செய்திப்பிரிவு

2021 ஜனவரி 1 முதல் 10 வரை பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகிறது.

மத்திய அரசு தனது அரசிதழில் 2018 ஜனவரி 2-ஆம் தேதியிட்ட 20-ஆம் எண்ணுள்ள அறிவிக்கையில் தேர்தல் பத்திரத் திட்டம் (2018) குறித்து வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்தல் பத்திரங்களைத் தனிப்பட்ட இந்தியாவின் குடிமகனோ, குடிமகனாக அறிவிக்கப்பட்டவரோ வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு நபர் இந்தப் பத்திரங்களைத் தனியாகவோ, கூட்டாகவோ பெற்றுக் கொள்ளலாம். இந்திய அரசின் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951) 29ஏ பிரிவின்கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்தக் கட்சி மக்களவைத் தேர்தலிலோ சட்டப் பேரவைத் தேர்தலிலோ ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டும். அக்கட்சிகளே தேர்தல் பத்திரங்களைப் பெறுவதற்குத் தகுதியுடையவை.

இந்தப் பத்திரங்களை வாங்கும் தகுதியான அரசியல் கட்சி, அதை மாற்றும் போது, வங்கிக்கணக்கு மூலமே நிதியைப் பெற முடியும். அதிகாரம் பெற்ற கிளைகளில் மட்டுமே கொடுத்து நிதியைப் பெற இயலும்.

இந்தப் பத்திரங்களை வழங்கவும், அவற்றைத் திருப்பித் தருவோருக்கு உரிய தொகையை அளிப்பதற்கும் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளுக்கு மட்டும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 1 முதல் 10 வரை பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளால் இவை விநியோகம் செய்யப்படும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை, சென்னை பாரிமுனையில் தம்பு செட்டி தெருவில் இருக்கும் சென்னை தலைமைக் கிளைக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT