கூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது புதிதாக ஆல்பபெட் என்னும் நிறுவனம் உருவாக்கப்பட்டு அதனுடைய துணை நிறுவனமாக கூகுள் உருவாக்கப்பட்டது. இன்னும் சில துணை நிறுவனங்கள் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் இணைக்கப்பட்டன.
இப்போது அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து கூகுள் நிறுவனத்தின் பெயர் ஆல்பபெட் என்று மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு ஆல்பபெட் என்று பெயர் மாற்றப்பட்டது. திங்கள் கிழமை வர்த்தகம் தொடங்கும் போது நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஆல்பபெட் என்ற பெயரில் வர்த்தகம் நடக்கும்.
ஆல்பபெட் நிறுவனம் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் தலைமையில் செயல்படும். அதன் கீழ் செயல்படும் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக தலைமைச் செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூகுள் நிறுவனத்துக்கு தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.