வணிகம்

6 காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீடு உயர வாய்ப்பு: ஐஆர்டிஏ தலைவர் தகவல்

பிடிஐ

குறைந்தபட்சம் ஆறு காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீடு உயர வாய்ப்பு இருப்பதாக காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணை யத்தின் தலைவர் டிஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார். காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தி கொள் வதற்கு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. தனியார் காப்பீட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் போது இதனை அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

ஆயூள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு பிரிவில் ஆறு முதல் ஏழு நிறுவனங்களின் அந்நிய முதலீடு உயர வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து இப்போதைக்கு மேலும் தகவல்களையோ, நிறுவனங்கள் பெயரையோ வெளியிட முடியாது. இந்த நிறுவனங்கள் பல கட்டங்களாக அனுமதி பெற வேண்டி இருக்கிறது.

தவிர நீண்ட கால ஹெல்த் பாலிசிகள் குறித்து ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் ஒரு முடிவெடுக்கும். இது குறித்து நியமிக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அதனை நாங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். நீண்ட கால ஹெல்த் பாலிசிகளுக்கான தேவை இருக்கிறது.

நாட்டில் காப்பீடு எடுத்தவர் களின் விகிதம் குறைவாக இருக்கிறது. அதனை உயர்த்த வேண்டியது அவசியம். அமெரிக் காவில் 80 சதவீத சொத்துகள் பொதுக் காப்பீட்டு துறையில் காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் 7 சதவீத சொத்துகள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT