ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் சிறிதளவு உயர்ந்து 2,431 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,425 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை 1.40% குறைந்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 8,930 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 8,804 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. எப்.எம்.சி.ஜி பிரிவின் வருமானம் 3.44% குறைந்தும், விவசாய பிரிவின் வருமானம் 10.44% குறைந்தும் இருந்தது. அதேபோல சிகரெட் பிரிவின் வருமானம் 1.5%, ஹோட்டல் பிரிவு வருமானம் 0.87% உயர்ந்தும் இருந்தது. விவசாய பிரிவின் வருமானம் குறைந்ததற்கு கோதுமை, காபி மற்றும் சோயா ஆகியவற்றின் ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததே காரணம் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.