வணிகம்

இந்தியாவின் சுவை: உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க பாங்காக்கில்  பிரச்சாரம்

செய்திப்பிரிவு

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக, 'இந்தியாவின் சுவை' என்னும் பிரச்சாரம் பாங்காக்கில் செய்யப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நமது நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை விரிவாக்கும் நோக்கில், வாங்குவோர் விற்போர் கூட்டத்தை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நடத்தியது.

2020 டிசம்பர் 21 அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரு நாட்டு அரசுகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண் மற்றும் உணவு துறையில் இந்தியா மற்றும் தாய்லாந்துக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பொதுவான தளத்தை இந்த கூட்டம் வழங்கியது.

காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் பல்வேறு நாடுகளுடன் நடத்தி வரும் நிகழ்ச்சிகளின் வரிசையில் பதிமூன்றாவது ஆகும்.

SCROLL FOR NEXT