வணிகம்

செப்டம்பர் மாதத்தில் பங்குச்சந்தையில் மியூச்சுவல் பண்ட் ரூ.8,700 கோடி முதலீடு

பிடிஐ

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன. பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.8,700 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன.

தொடர்ந்து 17-வது மாதமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிகர முதலீடு செய்துவருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10,533 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. செப்டம்பரில் 8,671 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு மாறாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த இரு மாதங்களாக தங்களது முதலீட்டினை வெளியே எடுத்துவருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 17,434 கோடி ரூபாயும், செப்டம்பர் மாதம் 6,475 கோடி ரூபாய் அளவும் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

அந்நிய முதலீட்டாளர் இந்திய சந்தையில் இருந்து வெளியேறு வதை மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் ஒரு வாய்ப்பாக கருதின என்று சந்தை வல்லுநர்கள் தெரி வித்தனர். கடந்த வருடம் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 80,000 கோடி ரூபாய்க்கு மேல் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன.

SCROLL FOR NEXT