அதிக சந்தைமதிப்பு உள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கியை பின்னுக்கு தள்ளி இன்போசிஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உள்ளன.
ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பை விட இன்போசிஸ் சந்தை மதிப்பு 432 கோடி ரூபாய் அதிகமாக (அக்டோபர் 1 நிலவரப்படி) இருக்கிறது.
கடந்த வாரத்தில் பங்குச்சந்தை யின் ஏற்றம் காரணமாக இன் போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,315 கோடி ரூபாய் உயர்ந்தது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் 4,570 கோடி ரூபாய் உயர்ந்தது. கடந்த வார வர்த்தகத்தில் (அக்டோபர் 1) தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையான 1,197 ரூபாய் என்ற விலையை இன்போசிஸ் பங்கு தொட்டது.