வணிகம்

ஆம்பி தலைவராக லியோ புரி நியமனம்

பிடிஐ

இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் (ஆம்பி) தலைவராக யூடிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லியோ புரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வருடத்துக்கு அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் இவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ரிலையன்ஸ் ஏஎம்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சந்திப் சிக்கா கடந்த இரு வருடங்களாக ஆம்பியின் தலைவராக இருந்தார்.

துணைத்தலைவராக பிர்லா சன்லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஏ.பாலசுப்ரமணியன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஒரு வருடங்களாக இந்த பதவியில் இருக்கும் இவர், மீண்டும் ஒரு வருட காலத்துக்கு நியமிக்கப்பட்டார்.

அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் சில மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருந்தன. இப்போது அம்டெக் ஆட்டோ சிக்கலில் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று சந்திப் சிக்காவிடம் கேட்டதற்கு, இயக்குநர் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என்றார்.

இந்தியாவில் 44 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சுமார் 13.5 லட்சம் கோடி சொத்துகளை கையாளுகின்றன.

SCROLL FOR NEXT