தபால் நிலையங்களில் முதலீடு செய்யப்பட்டு கேட்பாரற்று இருக்கும் சேமிப்பு பணம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள் நலநிதி 2016-இன் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கேட்பாரற்று இருக்கும் கணக்குகள்/சான்றிதழ்களை கையாள்வது குறித்து பின்வரும் அறிவிப்பை தபால் துறை வெளியிட்டுள்ளது.
தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் சேமிப்பு பணத்தின் மேலாண்மை மற்றும் கையாளுதல் குறித்த விதிகளை (மூத்த குடிமக்கள் நலநிதி 2016) இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, இத்தகைய கணக்குகள் (பத்து வருடங்களுக்கு மேலாக எந்தவித செயல்பாடும் இல்லாத கணக்குகள்) குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.
இந்த விதியைப் பின்பற்றி, இத்தகைய கணக்குகள் பற்றிய விவரங்களை தனது இணையதளத்தில் (www.indiapost.gov.in) தபால் துறை வெளியிட்டுள்ளது என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உள்ளூர் தபால் நிலையங்களை அணுகலாம்.