வணிகம்

ஊழியர்களுக்கு பங்கு: ரிலையன்ஸ் கேபிடல் அறிவிப்பு

பிடிஐ

ஊழியர்களுக்கு பங்குகள் வழங்கும் திட்டத்தை (இஎஸ்ஓபி) ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. தேர்ந் தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு உத்தேசமாக ரூ.150 கோடிக்கு பங்குகளை வழங்கத் திட்ட மிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் தற்போது இன்ஷூரன்ஸ், மியூச் சுவல் பண்ட், புரோக்கிங் மற்றும் புரோக்கிங் அல்லாத பைனான்ஸ் போன்ற தொழில்களை செய்து வருகிறது.

ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் அசெட் மேனேஜ்மெண்ட்,ரிலை யன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ், ரிலையன்ஸ் லைப் இன்ஷூ ரன்ஸ், ரிலையன்ஸ் செக்யூரிட் டீஸ் போன்ற துணை நிறுவனங் களில் பணிபுரிந்து வரும் 250 ஊழியர்களுக்கு பங்குகளை வழங்க இருக்கிறது.

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் சிஇஓ சாம் கோஷ், மதுசூதன் கெலா மற்ற உயர் அதிகாரிகளும் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் கேபிடல் துணைத் தலைவர் அமிதாப் ஜூன்ஜூன் வாலா கூறுகையில், திறமையான வர்களுக்கு நீண்ட கால வருமா னத்தை பெறும் வாய்ப்பை வழங்குகிறோம். மேலும் இது நிறுவனத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது என்று தெரி வித்துள்ளார்.

இந்த திட்டம் திறமை யானவர்களுக்கு மட்டும் உதவி செய்வது மட்டுமல்ல, ஊழியர்களை ஒழுங்கு படுத்தவும், நிறுவனத்தின் பங்கு தாரராக மாறும் வாய்ப்பையும் வழங்குகிறோம் என்று ஜூன்ஜூன்வாலா கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பட்டியலில் உள்ள பங்குகள் அல்லது மறைமுக பங்குகளை, இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. 6,46,080 பங்குகள் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவ னத்திலிருந்தும் மீதமுள்ள பங்குகளை மற்ற துணை நிறுவனங்களிலிருந்தும் இஎஸ்ஓபி பெற உள்ளது.

இந்த திட்டத்தின் உத்தேச தொகை ரூ.150 கோடி ரிலை யன்ஸ் கேபிடலின் சந்தை முதலீட்டில் 1.6 சதவீதமாகும்.

SCROLL FOR NEXT