வணிகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

பிடிஐ

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகப் படுத்தியுள்ளது. லூமியா 640 எல்டிஇ என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி அலைவரிசையில் செயல் படக் கூடியது. லூமியா ஸ்மார்ட் போன் வரிசையில் இது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதில் 13 மெகாபிக்ஸெல் கேமிரா உள்ளது. 5.7 அங்குல அகலமான திரை, 8.1 இயங்கு தளம் ஆகியவற்றுடன் இது வெளிவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் மொபைல் சாதன விற்பனை பிரிவின் தென் பிராந்திய இயக்குநர் டி.எஸ். தர் தெரிவித்தார்.

இரட்டை சிம் வசதி கொண்ட இந்த கேமிரா கொரில்லா கிளாஸ் 3 கொண்டது.

இதனால் சூரிய ஒளியிலும் படிக்க முடியும். 1.2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம், ஸ்நாப்டிராகன் 400 பிராசஸர் இதில் உள்ளன.

பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு சலுகை களோடு இந்த மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.17,399.

SCROLL FOR NEXT