வணிகம்

அசோக் வெமுரி ராஜிநாமா

செய்திப்பிரிவு

ஐகேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அசோக் வெமுரி ராஜிநாமா செய்தார். கடந்த ஜூலை மாதம் ஐகேட் நிறுவனத்தை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனம் வாங்கியது. இதனை தொடர்ந்து அசோக் வெமுரி ராஜிநாமா செய்தார். அசோக் வெமுரியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் உறுதியாக எதுவும் தெரியவில்லை.

நிறுவனத்தின் இணைப்பு பணி மற்றும் மாற்றத்துக்கு பெரிதும் உதவி புரிந்தவர் என்று கேப்ஜெமினி நிறுவனத்தின் பால் ஹெர்மெலின் தெரிவித்தார்.

ஐகேட் நிறுவனத்துக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் 15 வருடங்கள் வரை பணியாற்றினார். அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து ஐகேட் நிறுவனத்தின் சிஇஒவாக இருக்கிறார்.

SCROLL FOR NEXT