பெங்களூரைச் சேர்ந்த டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனம் ஸ்விட்சர்லாந்து நிறுவனத்துடன் குறைந்த விலையில் வீடுகளில் பயன்படுத்தக் கூடிய குடிநீர் சுத்திகரிப்பானை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த லைஃப்ஸ்டிரா எஸ்ஏ நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு மின்சாரம் தேவைப்படாத குடிநீர் சுத்திகரிப்பானை அறிமுகப்படுத்தியுள்ளது. நடுத்தர குடும்பங்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பானின் விலை ரூ. 3,495 ஆகும்.
ஈர்ப்பு சக்தி அடிப்படையிலான தொழில்நுட்ப அடிப்படையில் இந்த சுத்திகரிப்பான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட இந்த ரக சுத்திகரிப்பானுக்கு இந்தியச் சந்தையில் ரூ. 2,000 கோடி அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. மூன்று மாதங்களில் இந்த சுத்திகரிப்பான் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்துரு கல்ரோ தெரிவித்தார்.