முன்னணி தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா நேற்று சென்னையில் அந்த வங்கியின் தமிழ் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தியது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கியின் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கான தலைவரும்- செயல் துணைத் தலைவரும் தீபக் சர்மா, அந்த வங்கியின் தமிழ் செயலியான கோடக் பாரத் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
கோடக் மஹிந்திரா வங்கியின் கிளைகள் குறைவாக உள்ள பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் வங்கி செயல்பாடுகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் இந்த வசதியை வங்கி அறிமுகம் செய்துள்ளது. முக்கியமாக தற்போது ஆங்கில மொழி தவிர தமிழ், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த கோடக் பாரத் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் இணைய தொடர்பு இல்லாமல்கூட நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றார் தீபக் சர்மா.