வணிகம்

சண்டிகரில் வருமானவரித்துறை சோதனை: மருந்து நிறுவன அதிபரின் பினாமி சொத்து கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சண்டிகர், டெல்லி, மும்பையில் மருந்து நிறுவன அதிபருக்கு சொந்தமான 11 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பினாமி சொத்தை கண்டுபிடித்தனர்.

சண்டிகரில் மருந்து நிறுவன அதிபர் ஒருவர், பினாமி சொத்து மூலம் வருமானத்தை மறைப்பதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லி, மும்பை சண்டிகரில் 11 இடங்களில் கடந்த 13-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இதில் அந்த மருந்து நிறுவனம் இந்தூரில் 117 ஏக்கர் பினாமி நிலத்தை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தை விற்க ரூ.6 கோடி கணக்கில் காட்டப்படாத பணத்தை ஹவால் முறையில் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த மருத்து கம்பெனியின் நிர்வாக இயக்குநர் தனது சொந்த இடத்தை வாடகை இடமாக கணக்கு காட்டி, ரூ.2.33 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார்.

இந்த சோதனையில் ரொக்க பணம் ரூ.4.29 கோடி, ரூ.2.21 கோடி மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT