சட்டத்துக்கு புறம்பான மோசடி முதலீட்டுத் திட்டங்களை முடிவுக் குக் கொண்டு வர தற்போது நடை முறையில் உள்ள அவசரச் சட்டம் விரைவில் சட்டமாக வடிவெடுக்கும் என்று செபி தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்தார்.
முறைகேடான வழியில் நிதியை திரட்டி முதலீட்டாளர்களை ஏமாற் றும் நிறுவனங்கள் அதிகரித்து வரு கின்றன. புதிய சட்டத்தின் மூலம் இப்படிப்பட்ட மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
அவசரச் சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மோசடி நிறுவனத் தின் சொத்துக்களை முடக்குவது, இழந்த பணத்தை மீட்க வழக்கு தொடுப்பது, நிறுவனங்கள் மற்றும் நிறுவனர்களின் இடங்களில் தேடு தல் நடவடிக்கை எடுப்பது என செபிக்கு பல வகையில் அதிகாரம் கிடைத்துள்ளது என்றார். கடந்த வருடத்தில் இந்த அவசர சட்டம் மூன்று முறை கொண்டுவரப்பட்டது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தொடரில் இது சட்டமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுவரையில் மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக பல வகை நடவடிக்கைகள் எடுத்துவந் தாலும், இன்னமும் நிறைய எண் ணிக்கையில் இது போன்ற மோசடி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இது சிட் பண்ட், நிதி திட்டம், வீட்டுத் திட்டம் என்ற பல பெயர்களில் செயல்படுகின்றன.
100 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட் தொகையை திரட்ட வேண் டும் என்றால் கூட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ் செபியின் அனுமதி வாங்க வேண்டும் என்று அவசர சட்டம் சொல்கிறது. இந்த அவசர சட்டம் முதல் முறை கொண்டுவந்த போது 25 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்தோம் என்றார்.
அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம். அவர்கள் மேலும் நிதியை திரட்ட முடியாது. ஆனால் இப்போது அவசர சட்டம்தான் இருக்கிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம்தான் இருக்கிறது. அதனால் அரசாங்கம் விரைவில் இந்த அவசர சட்டத்தை சட்டமாக மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சின்ஹா தெரிவித்தார்.
மேலும் 20 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் முதலீட்டாளர் நலன் காப்பதற்காக சட்டங்களை உரு வாக்கி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாநில அரசுகளும் இதுபோன்ற சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று செபி தலைவர் சின்ஹா வேண்டுகோள் விடுத்தார்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டை களை பயன்படுத்தி மோசடி நிறு வனங்கள் நிதி திரட்டுவதை தடுப்பதற்கு இந்த சட்டங்கள் பயன் படும் என்றார். சமீப காலங்களில் இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் நாடுமுழுவதும் அதிகரித்து சிறு முதலீட்டாளர்கள் கோடிக் கணக்கான ரூபாயை இழந்தி ருக்கிறார்கள். இப்போதைக்கு 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செபியின் கண்காணிப்பு வளை யத்தில் இருக்கிறது. இதை தவிரவும் பல நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன.
இந்த அனைத்து நிறுவனங் களும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுப்பதாக வாக்கு றுதி கொடுத்து பெரிய தொகையை சுரண்டிக்கொண்டு காணாமல் போய்விடுகின்றன என்றார்.
கடந்த வருடத்தில் இந்த அவசர சட்டம் மூன்று முறை கொண்டுவரப்பட்டது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தொடரில் இது சட்டமாக மாறும்.