ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய அரசு செயல்படுத்திவரும் டிஜிட்டல் இந்தியாமயமாதலில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து காணொளி வாயிலாக ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் பியூயல் ஃபார் இந்தியா 2020 நிகழ்வில் முதல் முறையாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ஃபேஸ்புக் நிறுவனத்தைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும்முக்கியமான நாடாகும். லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களதுஉறவினர்கள், நண்பர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஃபேஸ்புக்-கை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெசஞ்சர் மூலமாக ஆர்டர்களை அனுப்பி தங்களது தொழில் வளர்வதற்கு பலரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். விரைவிலேயே சில புதிய தயாரிப்புகளை முதலில் இந்தியாவில் பயன்படுத்திப் பார்க்க முடிவு செய்துள்ளதாக ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து பேசினர். தொலைநோக்கு திட்டம் பல புதியவாய்ப்புகளை தொழில்துறையினருக்கு உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சியும் மேம்பாடும் அடைய முடியும் என்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்பதை அவர்கள் தங்களதுஆலோசனையின்போது குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்பார்மில் 570 கோடி டாலர்(ரூ.43,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆலோசனைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இத்திட்டத்தில் இளம் தலைமுறையினர் தொழில்தொடங்க தொழில்நுட்ப வசதியை அளிப்பதுதான் முக்கியமானதாகும். கடந்த 14 ஆண்டுகளில் எத்தகைய வளர்ச்சியை ஃபேஸ்புக் எட்டியுள்ளது என்பதன் மூலமே டிஜிட்டல் இந்தியாவின் இணைப்புப் பாலமாக ஃபேஸ்புக் திகழும் என்பதை இருவரும் சுட்டிக்காட்டினர்.