வணிகம்

இண்டிகோ ஐபிஓ விலை ரூ.700-765 ஆக நிர்ணயம்

செய்திப்பிரிவு

இண்டிகோ விமான நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவடைகிறது. 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளுக்கு 700-765 ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 3,268 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும்.

2.61 கோடி பங்குகள் வெளியிடப்படுகிறது. முன்னதாக 3.01 கோடி பங்குகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பங்குகள் பாம்பே பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

சமீபத்தில் வெளியான காபிடே ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த பங்குக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் லாபத்தில் இயங்கும் இரண்டு விமான நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. கோஏர் என்னும் நிறுவனமும் லாபத்தில் இயங்கி வருகிறது.

ஐபிஓவுக்கான முதல் கட்ட அனுமதிக்காக கடந்த ஜூன் மாதம் செபியிடம் இண்டிகோ விண்ணப்பித்திருந்தது. கடந்த மாதம் செபியிடம் இருந்து இந்த நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தது.

இப்போதைக்கு ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டு பட்டியலிடப்பட்ட விமான நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் செயல்பட்டு வருகின் றன.

கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் நான்கு மடங்கு உயர்ந்து 1304 கோடி ரூபாயாக இருந்தது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த ஏழு நிதி ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரு கின்றது

SCROLL FOR NEXT