‘2023ம் ஆண்டுக்கான, அரசு பங்கில் 4.48 சதவீதத்தை ரூ.6,000 கோடிக்கும், 2033ம் ஆண்டுக்கான பங்கு பத்திரங்களை ரூ.2,000 கோடிக்கும், 2035ம் ஆண்டுக்கான அரசு பங்குகளில் 6.22 சதவீதத்தை ரூ.9,000 கோடிக்கும், 2050ம் ஆண்டுக்கான அரசு பங்கில் 6.67 சதவீதத்தை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஏலம் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தில் 2020, டிசம்பர் 18ம் தேதி நடத்தப்படும்.
அரசுப் பங்குகள் ஏலத்தில், 5 சதவீதம் வரை, தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் போட்டியில்லா ஏல திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.
போட்டி மற்றும் போட்டியில்லா ஏலங்கள் ரிசர்வ் வங்கியின் இ-கூபர் அமைப்பில் எலக்ட்ரானிக் முறையில் டிசம்பர் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும். போட்டியில்லா ஏலங்கள் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையும், போட்டி ஏலங்கள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஏல முடிவுகள் 2020, டிசம்பர் 18ம் தேதி அறிவிக்கப்படும். ஏலத்தில் வென்றவர்கள், 2020 டிசம்பர் 21ம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும்.