நவம்பர் மாத மொத்தவிலை குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், 2020 நவம்பர் மாதத்துக்கான மொத்த விலை குறியீட்டு (தற்காலிக) எண்கள், செப்டம்பர் மாதத்துக்கான இறுதி செய்யப்பட்ட குறியீட்டு எண்கள் ஆகியவற்றை, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின், பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மொத்த விலை குறியீட்டு தற்காலிக எண்கள், ஒவ்வொரு மாதமும் 14ம்தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) வெளியிடப்படுகிறது. 10 வாரங்களுக்குப் பின் இந்த குறியீட்டு எண்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
பணவீக்கம்
மொத்தவிலை குறியீடு அடிப்படையில் பணவீக்கத்தின் அளவு 2020 நவம்பர் மாதத்தில் 1.55 சதவீதமாக (தற்காலிகம்) உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த அளவு 0.58 சதவீதமாக இருந்தது.