சர்வதேச நிதிசேவைகள் மைய ஆணையத்தின் (தங்கம், வெள்ளி சந்தை) விதிமுறைகள் -2020, மத்திய அரசின் அறிவிப்பாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் காந்தி நகர் மாவட்டத்தின் கிப்ட் நகரில் உள்ள சர்வதேச நிதி சேவைகள் மையத்தில், சர்வதேச தங்கம், வெள்ளி சந்தை அமைக்கப்படும் என பொது பட்ஜெட் 2020-ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தங்கம், வெள்ளி விற்பனை ஒப்பந்தம் மற்றும் டெபாசிட் ஆகியவற்றை சர்வதேச நிதி சேவைகள் ஆணைய சட்டத்தின் கீழ், நிதி தயாரிப்பு மற்றும் சேவைகளாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த தங்கம், வெள்ளி சந்தையை இயக்கும் பொறுப்பு சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான, விதிமுறைகளுக்கு, கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த கூட்டத்தில் சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த விதிமுறைகள் மத்திய அரசின் அறிவிப்பாணையில் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 16 பாகங்களாக உள்ளன.
இதன் முழு விவரம் சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் இணையதளத்தில் https://ifsca.gov.in/Regulation வெளியிடப்பட்டுள்ளது.