வணிகம்

இந்திய ஜிடிபி-யில் ஐபிஎல் பங்களிப்பு ரூ. 1,150 கோடி

செய்திப்பிரிவு

கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் போட்டிகள் மிகவும் பிரபலம். இந்த கிரிக்கெட் போட்டி களின் மூலமான வருமானம் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிர்ணயித்த கேபிஎம்ஜி விளையாட்டு ஆலோசனைக் குழு நடத்திய ஆய்வு முடிவுகள் இதை நிரூபித்துள்ளன.

2015-ம் ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் முடிவுகளின் படி மொத் தம் 193 கிரிக்கெட் வீரர்கள் பங் கேற்றுள்ளனர். மொத்தம் 17 லட் சம் கிரிக்கெட் ரசிகர்கள் இப் போட்டிகளை கண்டுகளித்துள்ள னர். இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 2,650 கோடி (4.18 கோடி டாலர்). ஐபிஎல் போட்டிகள் நடத்தியதன் மூலம் அந்தந்த மாநிலங்களுக்கும் வருவாய் கிடைத்துள்ளது.

8 பிரான்சைசி மூலம் 60 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 44 நாள் நடந்த இந்த போட்டிகள் 12 நகரங்களில் 13 வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்பட்டுள்ளன.

மொத்த பார்வையாளர்களில் 20 சதவீதம் பேர் வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளைக் காண சென்றுள்ளனர். உள்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவி லிருந்தும் இப்போட்டியைக் காண ரசிகர்கள் வந்துள்ளதாக கேபிஎம்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் மூலம் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறை மூலம் பலருக்கு வேலை கிடைத்துள்ளது.

இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐபிஎல் பங்களிப்பு ரூ. 1,150 கோடி என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT