வணிகம்

மும்பை பங்குச் சந்தை எழுச்சி: 46 ஆயிரம் புள்ளி கடந்து சாதனை

செய்திப்பிரிவு

பங்குச் சந்தையில் நேற்று குறிப்பிடத்தக்க எழுச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 495 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் முதல் முறையாக 46 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து 46,104 புள்ளிகளில் நிலை கொண்டது.

முக்கியமான 30 நிறுவனங்களின் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் 136 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 13,529 புள்ளிகளாக நிலைபெற்றது.

மும்பை சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் 3.59 சதவீதம் வரை உயர்ந்தன. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,909 கோடி முதலீடு செய்துள்ளன. மேலும் கரோனா தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்பட்டதும் பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT