வணிகம்

ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே

செய்திப்பிரிவு

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜாக் டோர்சே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் இவர் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனரும் இவரே. 2007-ம் ஆண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

முந்தைய தலைவர் டிக் காஸ்டோலோ கடந்த ஜூலை 1-ம் தேதி பதவி விலகியதை அடுத்து புதிய சிஇஒவாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர நிறுவனத்தின் சர்வதேச வருவாய் பிரிவுத் தலைவர் ஆடம் பெய்ன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது நியமனத்தை அடுத்து ட்விட்டர் பங்குகள் 7 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ட்விட்டர் பங்கு ஐபிஓ வெளியீட்டு விலைக்கு மேலே தற்போது வர்த்தகமாகி வருகிறது.

SCROLL FOR NEXT