நடப்பு காரீப் சந்தை பருவத்தில், கடந்த 5ம் தேதி வரை, 336.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 32.92 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.63563.79 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு காரீப் சந்தை பருவத்தில், உணவு தானியங்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடக்கிறது. கடந்த 5ம் தேதி வரை 336.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 279.91 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
மாநிலங்கள் வேண்டுகோள்படி தமிழகம், கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி வரை 130619.34 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை 74,613 விவசாயிகளிடமிருந்து ரூ.702.21 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.
இதே போல் 3961 விவசாயிகளிடமிருந்து 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே காலத்தில் 293.34 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5ம் தேதி வரை 7,50,779 விவசாயிகளிடமிருந்து, 3832259 பருத்தி கட்டுகள், ரூ.11084.78 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.