மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றையை பகிர்ந்துகொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரையிலும் இனிமேல் புதிதாக வழங்கப்படும் அலைக்கற்றை உரிமங்களுக்கும் இவ்விதம் அலைக்கற்றையை பகிர்ந்துகொள்வது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல ரேடியோ அலைவரிசையை பகிர்ந்து கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அலைக்கற்றை உரிமம் பெற்றுள்ள நிறுவனம் அதன் மூலம் பிற நிறுவனங்களுக்கு சேவை அளிக்கலாம். அல்லது அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.
ஒரே அலைவரிசையில் செயல்படும் நிறுவனங்கள் அவற்றிடம் உள்ள அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள முடியும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைக்கற்றை லைசென்ஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் சிக்னல் களை மொபைலுக்கு அனுப்பவும், மொபைல் கோபுரங்களை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அலைக் கற்றை பகிர்ந்து கொள்வது தொடர் பான விதிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நிறுவனங்கள் வசம் உள்ள அலைக்கற்றையை அதிகபட்சம் பயன்படுத்த முடியும். அத்துடன் கால் டிராப் எனப்படும் தொடர் அறுபடல் நிகழ்வு தவிர்க்கப்படும் என்று நம்பப் படுகிறது.
அடுத்து 700 மெகாஹெர்ட்ஸ் அலை வரிசை ஏலம் விடப்பட உள்ளது. அதற்கும் இந்த விதி பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒரே தொலைத் தொடர்பு வட்டாரத்தில் ஒரே அலைவரிசை யில் செயல்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்குள் அலைக்கற்றையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.