வணிகம்

ஆஸ்திரேலிய நிறுவன பங்குகளை வாங்கியது டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சரக்கு போக்குவரத்து நிறுவனமான டிரான்ஸ்டார் இண்டர்நேஷனல் பிரைட் நிறுவனத்தின் பெரும்பான் மையான பங்குகளை டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் வாங்கியது.

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் இதன் துணை நிறுவனமான டிவிஎஸ் ஆசியன்ஸ் சப்ளை செயின் சொல்யூஷன் வழியாக இந்த ஒப்பந்தம் போடப்பட் டுள்ளது.

டிரான்ஸ்டார் நிறுவனம் ஆசியா முழுவதும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோ கத்தை செய்து வருகிறது. ஏற்கெனவே தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கி வரும் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலியாவிலும் கால்பதிக்க உள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் லாஜிஸ் டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் பேசுகை யில், “டிரான்ஸ்டார் நிறுவனம் எங்களுடன் இணைந்தது மிகப் பெரிய பலமாக கருதுகிறோம். இதனால் ஆசிய பசிபிக் பகுதிகள் முழுவதுமாக எங்களால் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT