2020- 21 நிதியாண்டின் அக்டோபர் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகளின் ஆய்வு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
2020- 21 நிதியாண்டின் அக்டோபர் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
அக்டோபர் 2020 வரை இந்திய அரசு ரூபாய் 5,75,697 கோடி மதிப்பிலான வரி வருமானம், ரூபாய் 1,16,206 கோடி மதிப்பிலான வரியில்லா வருமானம் மற்றும் ரூபாய் 16,397 கோடி மதிப்பிலான கடன் இல்லா மூலதன ரசீதுகள் ஆகியவற்றின் வாயிலாக மொத்தம் ரூபாய் 7,08,300 கோடியைப் பெற்றுள்ளது.
அதிகார பகிர்வு பங்குகளின் வரியாக மாநில அரசுகளுக்கு ரூபாய் 2,97,174 கோடியை இந்திய அரசு பரிமாற்றம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட ரூபாய் 69,697 கோடி குறைவாகும்.
மேலும் ரூபாய் 16,61,454 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இதில் ரூபாய் 14,64,099 கோடி வருவாய் கணக்கிலிருந்தும், ரூபாய் 1,97,355 கோடி மூலதன கணக்கிலிருந்தும் செலவு செய்யப்பட்டுள்ளது.