பாங்க் ஆப் பரோடா வங்கியின் டெல்லி கிளை மூலம் நிகழ்த் தப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி குறித்து இதுபோன்ற தீவிரமான மோசடிகளை விசாரிக்கும் புலனாய்வுக் குழு (எஸ்எப்ஐஓ) 10 நிறுவனங்களிடம் விசாரணையைத் தொடங்கி யுள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு கள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில் நிறுவன விவகாரங் கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்எப்ஐஓ-வும் விசாரணை நடத்துகிறது.
நிறுவன விதிகளை மீறியுள் ளது தொடர்பாக 10 நிறுவனங் களிடம் இந்த அமைப்பு விசார ணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலமா கத்தான் கருப்புப் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விசாரணை முடிய மூன்று மாதங்களாகும் எனத் தெரிகிறது. விசாரணை விவரங்களை பிற அமைப்புகளிடமும் எஸ்ஐஎப்ஓ பகிர்ந்து கொள்ளும். நிறுவன விவகாரங்கள் துறை அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு உயர் நிலையில் நடைபெறும் மோசடிகளை விசாரிக்கிறது. குறிப்பாக நிறுவன விதிகளை மீறி நடைபெறும் `வொயிட் காலர்’ குற்றங்களை இது விசாரிக்கிறது.
ரூ. 6,172 கோடி தொகை பாங்க் ஆப் பரோடா வங்கியின் டெல்லி கிளையிலிருந்து ஹாங்காங் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட முந்திரி, பருப்பு மற்றும் அரிசி வகைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையாக கணக்குக் காட்டப்பட்டு அனுப்பப் பட்டுள்ளது.