வணிகம்

4 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டம்

செய்திப்பிரிவு

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிதாக நான்கு மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் இந்த காலாண்டு முடிவில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை சந்தையில் தனது விற்பனையை 22 சதவீதமாக அதிகரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.மேலும் இந்த மாதத்திற்குள்ளேயே மூன்று புதிய அவெஞ்சர் ரக மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு எஸ்.ரவிக்குமார் கூறியது:

நான்காவது காலாண்டில் முற்றிலும் புதிய மாடல்களை மோட்டார் சைக்கிள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளோம் மேலும் குறுகிய காலத்திற்குள் மொத்த இருசக்கர வாகன விற்பனை சந்தையில் எங்களது விற்பனையை 19 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.பருவமழை குறைந்ததால் கிராமப் புறங்களில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மந்த நிலையாக இருந்தது. வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனம் ஏப்ரல் முதல் செப்டம்பர் காலாண்டில் 9,55,148 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,52,492 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகனங்களின் விற்பனை 4.06 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT