வணிகம்

லேண்ட் லைனில் இருந்து மொபைல் போனில் பேச பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்: ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்

செய்திப்பிரிவு

2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது '0' அழுத்த வேண்டும்.

போதுமான எண் வளங்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும் விதமாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு தொலை தொடர்புத் துறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது.

இதன் படி, 2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது '0' அழுத்த வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை அழுத்துவதற்கு முன்னர் தொலைபேசியில் பூஜ்ஜியத்தை அழுத்தி, அழைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT