வணிகம்

போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

போலியான ரசீதுகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்காக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் மேலும் ஒருவரை கைது செய்தது.

உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக சத்தேந்திர குமார் சிங்க்லா என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான ரசீதுகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்காக விகாஸ் ஜெயின் என்பவரை ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் ரோஹ்த்தக் மண்டல அலுவலகம் கைது செய்துள்ளது.

ரூ 27.99 கோடி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக விகாஸ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் ரோஹ்த்தக் மண்டல அலுவலகம் தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்ட விகாஸ் ஜெயின் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT