வணிகம்

ஃபோக்ஸ்வேகன் பாணியில் ஸ்பெயின் கார் நிறுவனம் மோசடி: 7 லட்சம் கார்கள் சோதனையில் சிக்கின

ஐஏஎன்எஸ்

ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்கள் தற்போது புகை அளவு மோசடியில் சிக்கி பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த விவகாரம் அடங்கும் முன்பாக இதே பாணியில் ஸ்பெயினைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சீட், சாஃப்ட்வேரில் தில்லுமுல்லு செய்து கார்களை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போன்று சாஃப்ட்வேரில் மோசடி செய்ததாக சீட் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது.

சாஃப்ட்வேர் மோசடி காரணமாக ஸ்பெயினில் 3,320 கார்களை விற்பனை செய்வதை ஃபோக்ஸ்வேகன் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஸ்பெயின் நிறுவனமான சீட் கார்களில் இதுபோன்ற மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 7 லட்சம் கார்களில் இதுபோன்ற சாஃப்ட்வேர் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் சீட் நிறுவன சர்வதேச வர்த்தக அமைப்பு மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றில் எத்தனை கார்கள் ஸ்பெயினில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இத்தகைய பாதிப்புடைய கார்கள் பற்றிய விவரத்தை அதன் உரிமையாளர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக நிறுவன இணையதளத்தில் தேடும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய மோசடியான சாஃப்ட்வேரைக் கொண்ட இஏ 189 இன்ஜினை உற்பத்தி செய்வதை நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் வகுத்துள்ள புகை அளவு சோதனையில் வெற்றி பெறும் அளவுக்கு கார்களை தயாரிக்கும் வரையில் இத்தகைய சாப்ட்வேர் இன்ஜினை நிறுத்தி வைக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகை அளவு சோதனையின் போது ஃபோக்ஸ்வேகன் கார் களில் உள்ள சாப்ட்வேர் நிர்ணயிக் கப்பட்ட அளவுக்கு மட்டும்தான் புகையை வெளியிடுவதாகக் காட்டும். பிறகு வழக்கமாக சாலை களில் ஓடும்போது நிர்ணயிக்கப் பட்ட அளவைக் காட்டிலும் 40 மடங்கு நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நிறுவனம் இது போன்ற மோசடி செய்து 1.1 கோடி கார்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT