இ-காமர்ஸ் துறையின் முக்கிய நிறுவனமான பிளிப்கார்ட், ராம் வெங்கட்ராமனை தலைமை நிதி அதிகாரியாக நேற்று நியமனம் செய்தது. அதேபோல வரி விவகாரங்கள் பிரிவின் துணைத் தலைவராக பிரமோத் ஜெயின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராம் வெங்கட்ராமன் 19 வருடங்கள் யூனிலிவர் நிறுவ னத்தில் பணிபுரிந்தவர். அங்கு பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.
விற்பனை பிரிவில் நிதி விவகாரங்கள் பிரிவு தலைவராக இருந்தவர் இப்போது பிளிப்கார்ட் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரமோத் ஜெயின், முன்னதாக இண்டஸ் டவர் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். மிகப்பெரிய டவர் நிறுவனமான இது ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். அங்கு நிதிப்பிரிவின் துணைத்தலைவராக ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்.